முஹம்மது நபி எனும் இந்த மாபெரும் இறைவனின் தூதரை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது?
முஹம்மது நபி எனும் இறைவனின் தூதர் முஹம்மது நபியை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் கேள்விக்கு அவர் இறைவனின் தூதர் என்பதை விடவும் பொருத்தமான பதில் வேறு ஏதும் இருக்க முடியாது. ஆனால், அந்தத் தூதர் எனும் பரிமாணம் புரட்சிகரத் தன்மையை உள்ளடக்கி இருந்தது. அவர் ஓர் மதப் புரட்சியாளர். கல்லையும் மண்ணையும் கடவுளாக்கும் மடைமைத் தனத்தை தடுத்து நிறுத்தினார். மத அதிகார வர்க்கத்தின் சுரண்டலை கேள்வி கேட்டார். இறைவனை நேரடியாகவே அழைக்கலாம்; இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறு ஒரு நபரின் உதவி தேவை இல்லை என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக தான் கடவுள் கிடையாது; தன்னை வணங்கக் கூடாது எனத் தடை போட்டார். தனக்குச் சுயமாக அற்புத சக்திகள் ஏதும் கிடையாது என்றும் அறிவித்தார். அவர் ஓர் சமூகப் புரட்சியாளர். கறுப்பர்களையும் வெள்ளையர்களையும் சகோதர்களாக மாற்றினார். இன, மொழி, நிற அடிப்படையில் எவ்வித உயர்வும்-தாழ்வும் கிடையாது என்றார். அவமானமாகக் கருதி உயிரோடு புதைக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண் குழந்தையை தலையில் சுமந்தார். அவர் ஓர் அரசியல் புரட்சியாளர். அதிகாரம் அனைத்தும் இறைவனுக்கே, அது மன்னர்களுக்கோ, சர்வாதிகாரர்களுக்கோ, குறிப்பிட்ட வர்க்கத்திற்கோ கிடையாது என்றார். அவரைப் பற்றிக் கூற இன்னும் நிறைய உண்டு. 1400 ஆண்டுகள் கடந்த பின்னும் உலகளவில் நேசிக்கப்படும் தலைவர். அவரின் தலை முடியின் அளவிலிருந்து உண்டது, உடுத்தியது, நடந்தது, பேசியது என அனைத்தும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு பின்பற்றவும் படுகிறது.
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தில் இஸ்லாம்லாம் என்றே அறபி வார்த்தையே அது வேற்று மண்ணில் தோன்றிய மதம் தானே எனும் எண்ணத்தை நம்மில் ஏற்படுத்தலாம். நியாயம்தான் மறுப்பதற்கில்லை. ஆனால், உண்மையில் இஸ்லாம் மட்டும் தான் வெளியிலிருந்து இங்கு வந்ததா? நாம் இன்று உண்ணும் உணவு, உடுத்தும் உடை, நாம் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்பக் கருவிகள், நாம் பயணிக்கும் வாகனங்கள் என எல்லாவற்றிலும் ஓர் அந்நியத்தன்மை இருக்கத்தானே செய்கிறது. எனவே, ஒரு விஷயம் பயனுள்ளதா அல்லது பயனற்றதா எனும் பார்வையே மனித வாழ்வை மேம்படுத்தவும் செழுமைபடுத்தவும் உதவும். மனித குல வரலாறே கொடுக்கல்-பெறுவதிலேயே செழிப்புற்றது. இல்லையெனில் நாகரிக வரலற்றில் நாம் தனித்து விடப்படுவோம். நம் நாட்டிலும், உலகிலும் பெரும் மக்கள் தொகையால் பின்பற்றப்படும் இஸ்லாம் எனும் மதத்தையும் அவ்வாறே கொஞ்சம் பரந்த பார்வையோடு அணுக வேண்டியுள்ளது. ஆதாரபூர்வமான ஆவணங்களின் அடிப்படையில் தமிழகத்தில் இஸ்லாத்தின் வயது சுமார் 1100 ஆண்டுகள். ஆம், இன்னும் சில குறிப்புகளின்படி முஹம்மது நபியின் காலத்திலேயே இஸ்லாம் பிரிவுபடாத தமிழக-கேரள மண்ணைத் தொட்டுவிட்டது. அதை பல்வேறு வராலற்றுச் சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. இஸ்லாம் தமிழகத்தைப் பொறுத்தவரை கடலோடிகளின் மார்க்கம். அறபுக் கடலோடிகளால் இந்தியாவின் மேற்கு-கிழக்கு (கேரளா-தமிழ்நாடு) கடற்கரையை இஸ்லாம் வந்தடைந்து. அவ்வாறு இங்குவந்த அறபுகளும், இங்குள்ள சாதி அமைப்பால் பாதிப்படைந்து விடுதலைத் தேடி இஸ்லாத்திற்கு வந்தவர்களும், இஸ்லாத்தை ஆராய்ந்து ஏற்றவர்களும் என மொத்தத்’ தொகையினரே இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம். இதில் வெளியில் இருந்துவந்த அறபுகள் சொற்பத் தொகையினரே. இம்மண்ணின் மைந்தர்களே தமிழ் முஸ்லிம்களில் பெரும் தொகையினர். இன்னும் விரிவாக விரிவாக அறிய சத்தியச்சோலையுடன் தொடர்பில் இருங்கள்.