(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான். (அல்குர்ஆன் : 16:125)

image
quran

What we do

சத்தியச்சோலை (இஸ்லாமிய தகவல் மையம்) திருச்சியில் இஸ்லாத்தை பற்றிய உண்மையான தகவல்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது , இது உலகம் முழுவதும் 1.8 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்றக்கூடிய மார்க்கம்.

காந்திஜி

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)

அறிஞர் அண்ணா

கண்மூடிப்பழக்கங்களை கைவிடாச் செய்து, காட்டுமிராண்டி தன்மையினரை உயர்ந்த சமுதாயமாய் மாற்றி நெருக்கடியான நேரங்களிலும் இலட்சியங்களை நிறைவேற்றத் தவறாத கடமை வீரர் நபிகள் நாயகம். நபிகள் நாயகத்தின் இன்சொல்லும் புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமாக குழுமியதால் வெற்றி கொண்டிருக்கிற சக்தி அண்ணலின் பால் எனக்கு அளப்பெரிய பக்தியை உண்டாக்கியது -1967 அறிஞர் அண்ணாவின் உரையிலிருந்து.

டாக்டர் அம்பேத்கார்

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.

சரோஜினி நாயுடு

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரீக உலகம் விரும்பி நிற்கின்றதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரால் பிரச்சாரம் செய்யப்பட்டது . முஹம்மது பற்றி கவிக்குயில் சரோஜினி நாயுடு. (IDEALS OF ISLAM, vide Speeches & Writings, Madras, 1918, p.169)

அல்லாஹ்

அறபிமொழி பேசும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தமது கடவுளை ஏன் ‘அல்லாஹ்’ எனும் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்? இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். முஸ்லிம்களின் கடவுள் பெயர்தானே ‘அல்லாஹ்’. அந்த ‘அல்லாஹ்’ எனும் பெயர் கொண்டு ஏன் அறபிமொழி பேசும் பிற மதத்தவர்கள் தமது கடவுளை அழைக்க வேண்டும் எனும் சிந்தனையையும் நமக்குள் உண்டாக்கலாம். அதற்கான விடை இதுதான்: ‘அல்லாஹ்’ எனும் அறபி வார்த்தைக்கு தமிழில் கடவுள், இறைவன் எனும் பொருளாகும். இஸ்லாமிய மரபின்படி எல்லா மொழி பேசும் மக்களுக்கும் இறைவன் அம்மக்களிலிருந்தே தனது தூதர்களை அனுப்பினான். அவர்கள் தம் மொழியில் இறைவனைக் குறிக்கும் பெயர்களிலேயே மக்களுக்கு இறைவனை அறிமுகப்படுத்தினார்கள். இவ்வாறு ஆப்றஹாம், மோசஸ், இயேசு என அனைத்து தூதர்களும் தமது மொழியிலேயே இறைவனை அழைத்தார்கள். அவ்வரிசையில் இறுதியாக வந்த முஹம்மது நபி அறபி மொழி பேசியதால் அம்மொழியில் இறைவனை குறிக்கும் ‘அல்லாஹ்’ எனும் வார்த்தைக் கொண்டு அழைத்தார். ஒருவேளை முஹம்மது நபி தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்திருந்தால் இறைவன் என்றோ கடவுள் என்றோதான் அழைத்திருப்பார். அவ்வாறென்றால் முஸ்லிம்கள் அல்லாஹ் எனும் தனி ஒரு கடவுளை வணங்கவில்லையா என்றால், ஆம். முஸ்லிம்கள் வணங்குவது நம் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற அனைவருக்கும் பொதுவான இறைவனையே. பிறகு ஏன் அல்லாஹ் எனும் அறபி மொழி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும், இறைவன் என்றோ கடவுள் என்றோ அழைக்கலாமே. ஏனெனில், அல்லாஹ் எனும் அறபி வார்த்தைக்கு பாலும், பன்மையும் கிடையாது. அதாவது ‘இறைவன்’ எனும் வார்த்தையை ‘இறைவி’ எனும் பெண் பாலாக மாற்ற முடியும். ‘கடவுள்’ என்ற வார்த்தையை ‘கடவுள்கள்’ என பன்மையாக மாற்ற முடியும். ஆனால், அறபி இலக்கணப்படி அல்லாஹ் எனும் வார்த்தையை இவ்வாறெல்லாம் மாற்ற முடியாது. இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கைக்கு நெருக்கமான ஒரே வார்த்தை ‘அல்லாஹ்’ என்பதாகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வை பின்வருமாறு எழுத்திலும் முஸ்லிம்களின் உள்ளத்திலும் பதிவுசெய்துள்ளது. கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன். அவன் யாருடைய சந்ததியும் இல்லை; அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. மேலும், அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். (திருக்குர்ஆன் 114: 1-4) இன்னும் இஸ்லாமிய மரபு அல்லாஹ்வை அழிவற்றவன், அதிகாரம் மிக்கவன், வணங்குவதற்கு தகுதியானவன் என பல தனித்துவமான வர்ணனைகளால் பதிவு செய்துள்ளது. அவ்வளவு ஏன், அல்லாஹ் எனும் கூறும்போது எந்த உருவமும்கூட நம் மனப் பதிவில் வருவதில்லை. இப்பொழுது கூறுங்கள் அந்த மிகப் பெரியவனை அழைக்க ‘அல்லாஹ்’ எனும் வார்த்தையை விட வேறுசிறந்த வார்த்தை ஏதும் உள்ளதா?

Any Queries?

Send your queries to us by contacting us

Contact Us

  • முகவரி : 22A/1, முஹம்மது காம்ப்ளக்ஸ், ஹோட்டல் ஷான்ஸ் அருகில், தென்னூர், திருச்சி-17.
  • +91 9787742425
  • sathiyacholai@gmail.com
  • Donate Us
    Qrcode
    Location

    © 2024 Sky Brain Software's. All rights reserved.